8, 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

31st January 2019

tnkalvi.co.in News அரசுப் பள்ளிகளில் 8, 9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் ஸ்மார்ட் மடிக்கணினி வழங்கப்படவுள்ளது என பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பிஜிபி பொறியியல் கல்லூரியில், பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சி, கலைத் திறன் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் பழனி பெரியசாமி தலைமை வகித்தார். இவ் விழாவில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் பங்கேற்று அறிவியல் கண்காட்சியைத் தொடக்கி வைத்தனர். இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: ஆற்றலும், ஒழுக்கமும் கொண்ட சிறந்த கல்வியை மாநில அரசு அளித்து வருகிறது. ஏழை இல்லா தமிழகத்தை கல்வியால் மட்டும்தான் உருவாக்க முடியும் என்பதால்தான் ரூ.28,000 கோடி அளவுக்கு நிதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார். தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ரூ.30,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இஸ்ரோவில் உள்ளது போல் அருங்காட்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் வழிகாட்டுதலுடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில் சிறந்த கல்வியை உருவாக்க தலா ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் வரும் மார்ச் மாத இறுதிக்குள் 621 அட்டல் டிங்கரிங் ஆய்வகங்கள் திறக்கப்படும். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க எல்.கே.ஜி, யுகே.ஜி. வகுப்புகள் அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் நடந்த உலக தொழில்முதலீட்டாளர்கள் மாநாட்டில் மலேசிய, அமெரிக்க நிறுவனங்களோடு ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அறிவியல் பாடத் திட்டங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 35,000 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர். வரும் ஆண்டில் தமிழகத்தில் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி சேர்க்கப்பட்டு, மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கல்வியாக மாற்றி அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 11 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும். மேலும் 8, 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.17 லட்சம் ஸ்மார்ட் மடிக் கணினிகள் வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் சுமார் 25 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்கும் என்ற சாதனையை எட்ட முடியும் என்றார். இவ் விழாவில், நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரித் தாளாளர் கணபதி நன்றி கூறினார்.

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

Tuesday, December 18, 2018

tnkalvi.co.in News எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 தேர்வு மார்ச் 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. அவற்றுக்கான காலஅட்டவணை வருமாறு:-

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பு ஜனவரி மாதம் தொடங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Tuesday, December 18, 2018

tnkalvi.co.in News அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பு ஜனவரி மாதம் தொடங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று காலை கார் மூலம் சென்னையில் இருந்து காஞ்சீபுரம் வந்தார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் கோவில் பிரசாதங்கள் வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். அங்கிருந்து காஞ்சீ சங்கரமடம் சென்ற அவர், சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். சங்கரமடத்தில் முக்தியடைந்த மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள், ஜெயேந்திரர் ஆகியோரது பிருந்தாவனத்துக்கும் சென்று வணங்கினார். அதைதொடர்ந்து காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன், அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவதன் மூலம் அனைத்து துறைகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது. கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கை, நடந்த நிவாரண பணிகள் பாராட்டும்படி இருந்தன. தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி ஆசை இதன் மூலம் நிறைவேறும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

Tuesday, December 18, 2018

tnkalvi.co.in News எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 தேர்வு மார்ச் 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. அவற்றுக்கான காலஅட்டவணை வருமாறு:-

அரசுப்பள்ளி மேன்மை அடைய அனைத்து வேலையில்லா கணினி ஆசிரியர்களும் சேவை மனப்பாண்மையுடன் பணியாற்றுங்கள்! !!!

Tuesday, December 11, 2018

tnkalvi.co.in News அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் பிறப்பித்த அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் தற்போது 2,939 அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தற்போது 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட 814 கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக ஏற்பாடாக நவம்பர் 2018 முதல் பிப்ரவரி 2019 முடிய 4 மாதங்கள் அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமனம் மூலம் கணினி ஆசிரியர்கள் நியமிக்கும் வரை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும்போது குழு ஒன்று அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், கணினி பயிற்றுநர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்க வசதியாக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பு: ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படும். பணியிடங்களில் கணினி பயிற்றுநர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, அந்தந்த ஊர்களில் பள்ளி அருகில் வசிக்கும் உள்ளூர் இளைஞர்களில் கணினி பட்டம் பெற்று பி.எட்., தகுதி பெற்றவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தேர்வுக் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையிலான இந்தத் தற்காலிக நியமனங்கள் தற்போதுள்ள காலிப் பணியிடங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நியமனம் தற்காலிகமானது என சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படும் தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு மூன்று மாதங்களுக்கு (2018 டிசம்பர்- 2019 பிப்ரவரி வரை) ஊதியம் வழங்கும் வகையில் ஏற்படும் உத்தேச செலவினம் ரூ.1 கோடியே 83 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Monday, November 26, 2018

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை சாா்பில் தேசிய தோ்வு முகமைக்கு கடிதம் எழுதப்பட்ட நிலையில் ஒருவார காலம் அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ தோ்வுகளுக்காக நடத்தப்படும் நீட் தோ்வு இந்த ஆண்டு வருகின்ற மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்வுக்கு மாணவா்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (வெள்ளிக் கிழமை)
Home | Our Visitors: 10089
 
Education

Admission Open 2019

பி.எஸ்.பி பாலிடெக்னி கல்லூரி

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ

டிப்ளமோ இன் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்

சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ

மின் மற்றும் மின்னணு பொறியியல் டிப்ளமோ

டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்

கம்ப்யூட் இன்ஜினியரில் டிப்ளமோ

தொலைபேசி எண்: 044 - 27402230, +91 9444618024, +91 9940402693

வலைத்தளம்: www.psbpolytechnic.com